புளுதியூர் சந்தையில் ₹29 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், பிப்.19:  அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை  சந்தை நடைபெற்று வருவது வழக்கம். தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து மாடு, ஆடு மற்றும் கோழி உள்ளிட்டவைகளை வாங்கவும், விற்கவும் விவசாயிகள், வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சேலம், நாமக்கல், உடுமலை, பல்லடம் மற்றும் கேரளாவில் இருந்து மாடு, கோழி மற்றும் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் ஒரு மாடு ₹23,800 முதல் ₹48,500 வரையும், ஆடு ₹5,200 முதல் ₹9500 வரையும் விற்பனையானது. மொத்தம் ₹29 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழி ஒரு கிலோ உயிருடன் ₹350 முதல் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories:

>