காரிமங்கலம் அருகே பெரியார் பல்கலை விரிவாக்க கட்டிட பணிகாரி

மங்கலம், பிப்.19: காரிமங்கலம் ஒன்றியம் பூமாண்டஅள்ளியில், சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க கட்டிட பணி ₹11 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை கலெக்டர் கார்த்திகா தலைமையில் நேற்று காலை நடந்தது. எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், சப்கலெக்டர் பிரதாப், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் அன்பழகன் பங்கேற்று புதிய கட்டிட பணியை பூமி பூஜை செய்து வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், மாவட்ட பால்வளத் தலைவர் அன்பழகன், செல்வராஜ், காவேரி, ரவிசங்கர், செந்தில்குமார், மகேந்திரன், நந்தினி பிரியா செந்தில்குமார், பிடிஓக்கள் மீனா, மணிவண்ணன், தாசில்தார் கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>