×

அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு அரசு லேப் டெக்னீசியன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, பிப்.19: தர்மபுரி அரசு மருத்துவமனையில், லேப் டெக்னீசியன் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பும் அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு லேப் டெக்னீசியன் சங்கத்தின் சார்பில், லேப் டெக்னீசியன் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்ப தமிழக அரசாணை வெளியிட்டுள்ளதை ரத்து செய்து, காலமுறை ஊதிய பணியிடங்களாக அறிவிக்க வலியுறுத்தி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் மைக்கல் பாபு தலைமை வகித்தார். மாநில செயலாளர் முருகானந்தம், தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர் ரமேஷ் கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட பொருளாளர் சக்திவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் நிர்வாகிகள் பேசுகையில், ‘புதியதாக தமிழக அரசு அறிவித்துள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், லேப் டெக்னீசியன் நிலை-2 பணியிடங்கள் மட்டும் அவுட்சோர்சிங் (அத்துக்கூலியாக) மூலம் நிரப்ப, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை ரத்து செய் வேண்டும். தர்மபுரி மருத்துவக்கல்லூரியில் கடந்த 6 மாதங்களாக சம்பளமின்றி தவிக்கும் 8 லேப் டெக்னீசியன்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கவேண்டும்,’

Tags : Lab Technicians Association ,protests ,
× RELATED சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்