என்றனர். மாணவி தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

கடத்தூர், பிப்.19: கடத்தூர் ஒன்றியம் சிந்தல்பாடியில் வசித்து வருபவர் ஷாஜகான். இவர் வாரச் சந்தைகளில் பலசரக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் பாத்திமா (12), தொங்கனுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம், தனது தாயார் நகினாவுடன் தர்மபுரியில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக ஒரு பவுன் தங்க செயினை கழுத்தில் அணிந்துகொண்டு சிந்தல்பாடி பஸ் நிலையம் சென்றார். அங்கு சென்று பார்த்த போது கழுத்தில் இருந்த தங்கச் செயின் காணவில்லை. இதனால் பதறிய அவர்கள் அங்குமிங்கும் தேடினர். ஆனால் தங்கச்செயின் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிந்தல்பாடியில் ஓட்டலில் வேலை செய்து வரும் மகேஸ்வரி(50) என்பவர், கீழே கிடந்த செயினை எடுத்துக்கொண்டு, அது யாருடையது என விசாரித்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், செயின் மகேஸ்வரியிடம் இருப்பதை அறிந்த பாத்திமா, நேற்று தனது பெற்றோருடன் அவரது வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து கூறினார். இதையடுத்து அவரிடம் செயினை, மகேஸ்வரி ஒப்படைத்தார். இதனை அறிந்த சிந்தல்பாடி வார்டு கவுன்சிலர் அமின்பீ மற்றும் திமுக கிளை செயலாளர் ஆதம் எக்ஸ் ஆகியோர், மகேஸ்வரியை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.

Related Stories:

More
>