×

பாப்பிரெட்டிப்பட்டியில் மன்ற தொடக்க விழா

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.19: பாப்பிரெட்டிப்பட்டியில், பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில், கணிணி அறிவியல் துறை மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பெரியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினரும், தமிழ் துறைத் தலைவருமான செந்தில்குமார், கணிணி அறிவியல் துறைத்தலைவர் சங்கீதா முன்னிலை வகித்து பேசினர். விழாவில் கணிணி அறிவியல் சார்ந்த மன்ற செயல்பாடுகள் மற்றும் வன்பொருள், மென்பொருள், புதிய கண்டுபிடிப்புகள் பயன்படுத்துவது எப்படி? என்பது பற்றி விளக்கப்பட்டது. நிகழ்ச்சியை உதவி பேராசிரியர் அருண் நேரு ஒருங்கிணைத்தார்.

Tags : Forum Opening Ceremony ,Papiretti Bar ,
× RELATED (வேலூர்) சுற்றுச்சூழல் மன்றம் துவக்க...