தாளநத்தத்தில் மினி கிளினிக்

கடத்தூர், பிப்.19: கடத்தூர் ஒன்றியத்தில், மருத்துவமனை வசதியின்றி பொதுமக்கள் தர்மபுரி, பாலக்கோடு உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தாளநத்தம் பகுதியில் மினி கிளினிக் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று, தர்மபுரி சுகாதாரத்துறை இயக்குனர் ஜெமினி, மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என வரையறை அமைத்து கொடுத்தார். இந்நிகழ்ச்சியில், மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் அரசு, வனிதா, சுகாதார ஆய்வாளர்கள் சிவலிங்கம், இளந்திரையன் உள்ளிட்ட பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>