×

இ.பி. காலனியில் அடிப்படை வசதி கேட்டு மனு

திருப்பூர், பிப்.19: திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டல பகுதியில் அடிப்படை வசதி செய்துதரக்கோரி முன்னாள் கவுன்சிலர் நடராஜ் தலைமையில், பொதுமக்கள் முதல் மண்டல உதவி ஆணையர் வாசுகுமாரை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில், மாநகராட்சி 11வது வார்டு இ.பி.,காலனி மேல்நிலை தொட்டியில் இருந்து, குடிநீர் 13 நாட்களுக்கு ஒருமுறையே வினியோகிக்கப்படுகிறது. 5 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்க வேண்டும். 4வது திட்ட குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி முழுமை அடையவில்லை. பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீடுகளுக்கு செல்லாமல் சாலையில் செல்கிறது. சாக்கடை கால்வாயை தூர் வார வேண்டும். 6வது வார்டு நடராஜ் லே-அவுட் 4வது வீதியில் சாக்கடை பிரச்னைக்கு நீண்டகாலமாக தீர்வு காணவில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : E.P. ,facilities ,colony ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...