×

மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 223ஆக உள்ளது. அமராவதி அணையில் 21ம் ேததி முதல் படகு சவாரி துவக்கம்


உடுமலை, பிப்.19:  உடுமலை அமராவதி அணையில் வரும் 21ம் தேதி முதல் படகு சவாரி துவங்குகிறது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால் அமராவதி அணை நிரம்பி வழிந்தது. 80 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 88 அடிக்கு மேல் உள்ளது.அமராவதி அணையில் மகளிர் குழு மூலம் படகு சவாரி நடத்தப்படுகிறது. சுற்றுலா வரும் பொதுமக்கள் படகில் அணையை சுற்றிப்பார்ப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் படகு சவாரி துவங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.இதை ஏற்று, வரும் 21ம் தேதி (ஞாயிறு) முதல் படகு சவாரி துவங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஒரு படகு உள்ளது. இதில் 8 முதல் 10 பேர் வரை செல்ல முடியும். அணையில் 3 கி.மீ. சுற்றளவுக்கு சுற்றிக் காண்பிக்கப்படும்.உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும், மகளிர் குழுவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : district ,boat ride ,Amravati Dam ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்