×

நகராட்சி அலுவலக நடைபாதை அடைப்பு

ஊட்டி, பிப்.19:ஊட்டி நகரில் இருந்து நகராட்சி அலுவலகம் செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஊட்டி நகராட்சி அலுவலகம் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. பழமையான கட்டிடத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த அலுவலகத்திற்கு செல்வதற்காக இரு வழித்தடங்கள் உள்ளன. ஊட்டி நகரில் இருந்து எளிதாக செல்லும் சிறிய நடைபாதை ஒன்று உள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளி வழியாக செல்லும் இந்த நடைபாதை பொதுமக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்த நடைபாதையை நகராட்சி நிர்வாகம் அடைத்தது.

ஆனால், தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிைலயில் சகஜ நிலை திரும்பியுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும், அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், ஊட்டி நகரில் இருந்து நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் நடைபாதை இது வரை திறக்கப்படாமல் உள்ளது. நகரில் இருந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் இந்த நடைபாதை மூடப்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, 100 ஆண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி இந்த நடைபாதையை திறக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி