தர்மபுரி, ஏப்.5: தர்மபுரி மாவட்டம், அரூர் எல்லப்புடையாம்பட்டி பகுதியைந் சேர்ந்தவர் அரவிந்த் (38). பிஇ மெக்கானிக் படித்திருந்த இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன், சென்னையில் நடந்த சாலை விபத்தில் சிக்கிய அரவிந்துக்கு, தலை மற்றும் தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால், மனவேதனையில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவலின் பேரில், அரூர் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
