×

ஊட்டி கோர்ட் வளாகத்தில் இருந்த அபாயகரமான மரங்கள் அகற்றம்

ஊட்டி, பிப்.19: ஊட்டி கோர்ட் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் இருந்த அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் ஏராளமான கற்பூரம், சீகை மற்றும் சவுக்கு மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை, நெடு நெடுவென வளர்ந்து நிற்கின்றன. மழைக்காலங்களில் இந்த மரங்கள் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன. எனவே, குடியிருப்புகள் மற்றும் அரசு கட்டிடங்களின் அருகேயுள்ள ராட்சத மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் ஏராளமான கற்பூரம் மற்றும் சவுக்கு மரங்கள் வளர்ந்துள்ளன. இவைகளை அகற்ற வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, இந்த அலுவலக வளாகத்திற்குள் இருந்த அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் தற்போது துவங்கி உள்ளது. இதனால், பொதுமக்கள், ஊழியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : Removal ,premises ,Ooty Court ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...