108 ஆம்புலன்ஸ் சேவை குறித்து விழிப்புணர்வு

ஊட்டி, பிப்.19: 108 ஆம்புலன்ஸ் மற்றும் அதன் சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளன. இது குறித்து பெரும்பாலான மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தாலும், சிலருக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்து தெரிவதில்லை. இதனால், 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டி மத்திய பஸ் நிலையம், கிராமப்புறங்களுக்கு செல்லும் ஏடிசி பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories:

>