இவ்வாறு அவர்கள் கூறினர். கோத்தகிரி அருகே பழங்குடியின பெண்கள், குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் துவக்கம்

ஊட்டி, பிப்.19: கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீலகிரி பாதுகாப்பு சங்கம் ஆகியவை சார்பில் பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய சத்துணவு வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று துவக்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: நீலகிாி மாவட்டத்தில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் முன்னோடி மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.2 வருடத்திற்கு முன்பு இஸ்பிரவா நிறுவனம் சார்பில் 6 மாதங்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதன்மூலம், 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் எடை அதிகரித்து பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில் கரிக்கையூர் பகுதியில் உள்ள பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்க முன்வந்துள்ளனர்.

இதில், அரக்கோடு ஊராட்சியில் 5 கிராமங்களும், ஸ்ரீமதுரை ஊராட்சியில் 5 கிராமங்களுக்கும் முதற்கட்டமாக அங்கு வசிக்கும் மக்களுக்கு புரதம், இரும்பு சத்து அதிகமுள்ள ராகி, திணை, சாமை, கம்பு, நிலக்கடலை அடங்கிய பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து மீதமுள்ள கிராமங்களுக்கு சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 183 குடும்பங்களை சேர்ந்த 664 பேர் பயன்பெறுவார்கள். சுகாதாரத்துறையுடன் இணைந்து இப்பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களின் எடை, ரத்தத்தின் அளவு, குழந்தைகளின் உயரம், எடை போன்றவை தொடர்ந்து பரிசோதனை செய்யப்படும். எனவே, பழங்குடியின மக்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில், தொண்டு நிறுவன தலைவர் ஸ்வரன்சிங், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, துணை ஆட்சியர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>