×

குன்னூர் அருகே டைகர் ஹில் கல்லறையில் வான தேவதை சிலை மாயம்

குன்னூர், பிப்.19: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில். ஆட்சி அலுவலக கட்டிடங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. நூற்றாண்டுகளை கடந்தும் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது பல தேவாலயங்கள்.
இந்நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லறைகளில் மிக முக்கியமான கல்லறை குன்னூர் டைகர் ஹில். இந்த கல்லறை 1905ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. தென் இந்தியாவை முதன்முதலில் புகை படமாக ஆவணப்படுத்திய ஏ.டி.டபில்யூ.பென் என்பவரது கல்லறை இங்குதான் உள்ளது. இதுதவிர, கூட்டுறவின் தந்தை என்றழைக்கப்படும் சர் ஜான் நிக்கல்சன்னின் கல்லறையும் இங்குதான் அமைந்துள்ளது. சிறந்த கலைநயம் மிக்க கலைஞர்களை கொண்டு இந்த கல்லறை உருவாக்கப்பட்டது. இந்த கல்லறையின் மத்தியில் மவ்ரிங் ஏன்ஜல் என்றழைக்கப்படும் அழகிய மூன்று வான தேவதைகள் பளிங்கி கற்களால் உருவாக்கப்பட்டது.

சில சமூக விரோதிகள் இரண்டு தேவதை சிலைகளை திருடி சென்றனர். தற்போது, ஒரே ஒரு சிலையும் சேதமடைந்து நிலையில்  காணப்பட்டது. இந்த கல்லறை எந்தவித பராமரிப்பும் இன்றி மோசமான நிலையில்  உள்ளது.
க்ளீன் குன்னூர் தன்னார்வலர்கள் இணைந்து கல்லறையை சுத்தம் செய்து தடுப்பு சுவர் அமைத்து பராமரித்து வந்தனர். இந்நிலையில், தற்போது அங்கிருந்த மற்றொரு தேவதை சிலையையும் சிலர் திருடி சென்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coonoor ,Tiger Hill Cemetery ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...