தேர்தல் நெருங்குவதால் சோதனை தீவிரம் பாலக்காடு ரயில் நிலையத்தில் 2.8 கிலோ நகைகள் பறிமுதல்

பாலக்காடு, பிப்.19: பாலக்காடு ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இல்லாமல் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட 2.8 கிலோ நகைகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இரு பயணிகளை கைது செய்தனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கேரளாவில் கலால்துறை அதிகாரிகள், ரயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டி கார்டு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது, 2 பயணிகளின் உடமைகளை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.88 லட்சம் மதிப்பிலான 2.8 கிலோ நகைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள்,  திருச்சூர் மாவட்டம் முளம்குன்னத்துக்காவை சேர்ந்த சந்தோஷ்போழ் (45), பாலக்காடு மாவட்டம் அஞ்சுமூர்த்திமங்கலத்தை சேர்ந்த சுனில்குமார் (35) என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த ரயில்வே போலீசார், நகைகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>