குடிநீர் என நினைத்து கிருமிநாசினியை குடித்த தொழிலாளி பலி

சூலூர்,பிப்.19:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் முருகன் (52). இவர் சூலூர் அருகே பாப்பம்பட்டியில் தங்கி கோழிக் கழிவுகளை லாரியில் ஏற்றும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சூலூர் அருகே நாகநாயக்கன் பாளையம் பகுதியில் வசிக்கும்  துரைராஜ்(65) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கோழிக் கழிவுகளை லாரியில் ஏற்றும் பணியில் நேற்று முருகன் ஈடுபட்டார்.பணி முடிந்தபின் தண்ணீர் குடிக்க தோட்டத்திற்கு சென்றார். அங்கு தண்ணீர் தொட்டி அருகே வைத்திருந்த பாட்டிலில் இருந்த கிருமி நாசினியை தண்ணீர் என நினைத்து குடித்தார். இதையடுத்து முருகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சூலூர் போலீஸார் முருகனின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>