×

பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க கேட்டு கொமதேக கையெழுத்து இயக்கம்

பொள்ளாச்சி, பிப். 19: பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க கோரி கொமதேக சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், தன்னார்வல தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க கோரி கொமதேக சார்பில்  பஸ் நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கொமதேக மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில், பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் ஆர்வமுடன் கையெழுத்து போட்டனர். இதையடுத்து, நகர் மற்றும் கிராம பகுதிகளில், கையெழுத்து இயக்கத்தையும் கொமதேகவினர் துவங்கினர்.கொமதேக மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் உள்ள  பொள்ளாச்சியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கப்பட்டால், பொள்ளாச்சி மற்றும் அதனுடன் இணையும் சுற்றுவட்டார தாலுக்காவும் வளர்ச்சியடையும். பொருளாதாரம் உயரும்.

வேலை வாய்ப்புகள் பெருகும். பொள்ளாச்சியை மாவட்டமாக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காக சுமார் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
வால்பாறை, பிப். 19: வால்பாறை நகர கொமதேக ஆலோசனை கூட்டம்  நேற்று நகர செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. நகர தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூபாய் 500 வழங்கவேண்டும், வன விலங்குகளால் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி அரசு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் தியாக மூர்த்தி, ராமமூர்த்தி, ஜெபசிங், மகளிரணி தங்கப்பொண்ணு, ராமலட்சுமி, உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் வார்டு செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : Komadeka ,district ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!