ஸ்டாலின் வருகைக்கு அழைப்பு விடுத்து குடு குடுப்பைக்காரன் வேஷமிட்டு கிராம பகுதிகளில் நூதன பிரசாரம்

பொள்ளாச்சி, பிப். 19:  பொள்ளர்சசி அருகே கோவைரோடு ஆ.சங்கம்பாளையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திடலில் நாளை நடக்கும்,  ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், திமுக தலைவர்   மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, கோவை தெற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட மக்களின் குறைகளை கேட்கவுள்ளார். இதையொட்டி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட நகர், ஒன்றிய பகுதிகளில் திமுகவினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.  இதில் நேற்று, ஆனைமலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வக்கம்பாளையம், நாயக்கன்பாளையம், சிங்காநல்லூர் ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதில், குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து, நல்லகாலம் பிறக்குது, பொள்ளாச்சிக்கு ஸ்டாலின் வாராரு,  உள்ளிட்ட பல்வேறு வாசகத்துடன் பேசி பொதுமக்களை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் வருகை குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் அளிக்கப்பட்டது.

இப்பிரசாரத்தை கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல்செல்வராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஆனைமலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கன்னிமுத்து, மாநில நெசவாளர் அணி செயலாளர் குள்ளக்காபாளையம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி வரவேற்றார். குடுகுடுப்பைக்காரராக முத்தூர் திருவேங்கிடம் என்பவர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், நகர துணை செயலாளர் கார்த்திகேயன், சார்பு அணி நிர்வாகிகள்  ஜோதிநகர் செந்தில்குமார், பொட்டுமேடு தங்கவேல், ராஜகோபால், ராமு,  கிளை செயலாளர் வக்கீல் திருநாவுக்கரசு, பட்டீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>