×

பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு பூட்டு ேபாட்ட திமுகவினர் கைது

வால்பாறை, பிப்.19:  வால்பாறையில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிலைய அலுவலகத்திற்கு திமுகவினர் பூட்டுபோட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்தனர். வால்பாறை பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட எஸ்டேட்கள் உள்ளன. இந்நிலையில் சோலையார் அணை, வாட்டர் பால்ஸ், முடீஸ், சிங்கோனா,  வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் செயல்பட்டுவரும்  பி.எஸ்.என்.எல்  டவர்கள் முறையாக இயங்குவது இல்லை.மின்இணைப்பு காலை 8 மணிக்கு துண்டிக்கப்பட்டால் அதற்கு பிறகு செல்போன்கள் வேலை செய்யாது.  சம்பவம் அறிந்து 5 மணி நேரம் அல்லது 9 மணிநேரத்திற்கு பிறகு டவர் வேலைசெய்யவில்லை என்று தெரிந்த பிறகு அலுவலர்கள் சென்று, மீண்டும் சரிசெய்தால் மட்டுமே இயங்கும். குறிப்பாக வாட்டர்பால்ஸ், சோலையார் அணை, சிங்கோனா பகுதிகளுக்கு 24 மணி நேரத்திற்கு பிறகே பழுது சரி செய்யப்படும் நிலை நீடிக்கிறது. மின்சாரம் 2 நாட்கள் துண்டிப்பு என்றால், 2 நாட்களும் செல்போன் டவர் வேலை செய்யாது.  இதனால்  பி.எஸ்.என்.எல் சிக்கனல் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிட்டால் வனத்துறைக்கு புகார் அளிக்கமுடியாது. மேலும் எஸ்டேட் பகுதிகளில் யானைகள் முற்றுகையிட்டால் எச்சரிக்கை செய்யும் சிவப்பு மின்விளக்குகள் அனைத்தும், ஜிபிஆர்எஸ் தொழில்நுட்ப அடிப்படையில் இயங்குவதால், வால்பாறை பகுதியில் பி.எஸ்.என்.எல் தொலை பேசி செயல் இழந்துவிட்டால் உயிர்பலி ஏற்படும் நிலையும் உள்ளது.இந்நிலை தொடர்வதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இதை கண்டித்து திமுக வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் திமுகவினர் மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவரும் திரண்டு பிஎஸ்.என்.எல் தொலைபேசி நிலையத்திற்கு நேற்று பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை வால்பாறை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பிறகு மாலையில் விடுவித்தனர்.தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் செல்போன் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : DMK ,BSNL ,
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...