விபத்தின்றி வாகனத்தை இயக்கிய டிரைவர்களுக்கு நினைவு பரிசு

பொள்ளாச்சி, பிப். 19: விபத்தின்றி வாகனத்தை இயக்கிய டிரைவர்களுக்கு  வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடந்த மாதம் 18ம் தேதி துவங்கியது. வெவ்வேறு நாட்களில் இருசக்கர வாகன பேரணி, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, தனியார் பயிற்சி பள்ளி வாகன  பேரணி, சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு என  பல்வேறு நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. இந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவானது, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி, சுமார் 15ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் வாகனத்தை இயக்கிய சுற்றுலா கார் டிரைவர்கள், பஸ் மற்றும் லாரி டிரைவர்களுக்கு நினைவு பரிச வழங்கும் நிகழ்ச்சி  பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கி நினைவு பரிசுகளை வழங்கினார். அப்போது டிரைவர்கள் பலர், பல ஆண்டுகளாக தங்களின் அனுபவங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.  மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>