பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

அந்தியூர், பிப். 19:   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி எட்டிக்கொட்டைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் அதே பகுதியில் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுப்பாத்தாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கோதைநாயகி (17), ஆப்பக்கூடல் புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இளைய மகள் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, கோதை நாயகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில், ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

More
>