கல்லூரி மாணவி தற்கொலை

ஈரோடு,பிப்.19:  சத்தியமங்கலம், தட்டாம்புதூர், கண்ணதாசன்நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் கவுரி(19). இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் கவுரி வாந்தி எடுத்த நிலையில், மயங்கி கீழே விழுந்தார். பின்னர் பெற்றோர் விசாரித்த போது வயிற்றுவலி தாங்க முடியாமல் சாணிப்பவுடர் கரைத்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கவுரி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

More
>