பவானியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

பவானி,பிப்.19:  பவானி நகர திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், நகரச் செயலாளர் நாகராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நகர அவைத் தலைவர்மாணிக்கராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டப் பிரதிநிதிகள் நல்லசிவம், ராஜசேகர், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் பிரகாஷ், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் அறிவானந்தம் சிறப்புரையாற்றினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் வகையில் வாக்காளர்களைச் சந்தித்து வாக்குகள் சேகரிப்பது, திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறுவது, அதிமுகவின் ஊழல், மக்கள் விரோத போக்கை விளக்கிக் கூற வேண்டும். வாக்குசாவடி அளவில் வாக்குகளைப் பெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஈரோடு வடக்கு மாவட்டம் பங்களாப்புதூர் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில், திமுகவினர் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. மாவட்ட இலக்கிய துணை அமைப்பாளர் அன்பழகன், தலைமை கழகப் பேச்சாளர் பவானி கண்ணன், பொருளாளர் கு.செல்வராஜ், நகரத் துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், ரவி, சின்னம்மாள், மாணவரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித், நிர்வாகிகள் ஜெயராமன், ராமச்சந்திரன், ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>