அகல் விளக்கு தீபம் ஏந்தி பெண்கள் உறுதிமொழி 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு

திருவண்ணாமலை பிப்.19: 100 சதவீதம் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, அகல் விளக்கு தீபம் ஏந்தி மகளிர் சுய உதவிக்குழுவினர் உறுதிமொழி ஏற்றனர். திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. அப்போது, மகளிர் திட்டம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி, வாக்களிப்பது நமது கடமை 100 சதவீத வாக்குப்பதிவு உறுதி செய்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.அதைத்தொடர்ந்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசுகையில், `18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரில் சேர்ப்பது அவசியம். அதேபோல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் தேர்தலின்போது வாக்களிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த தேர்தலில் 78 சதவீத வாக்கு பதிவாகியிருக்கிறது. வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு உறுதி செய்ய வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ முத்துக்குமாரசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>