×

வேலூர் புதிய பஸ்நிலையம் பின்புறம் 11.03 கோடியிலான பார்க்கிங் பணிகள் நிறைவு அடுத்தவாரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது

வேலூர், பிப்.19: வேலூர் புதிய பஸ்நிலையம் பின்புறம் ₹11.03 கோடியில் கட்டப்பட்டு வந்த பார்க்கிங் பணிகள் நிறைவு பெற்றது. அடுத்த வாரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது என்று கமிஷனர் சங்கரன் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வேலூர் புதிய பஸ்நிலையம் பின்புறம் ₹11.03 கோடியில் நவீன பார்க்கிங் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இதில் இருசக்கர வாகனங்கள் 1,059, 4 சக்கர வாகனங்கள் 42 எண்ணிக்கையில் நிறுத்து வதற்கு சாய்வு தள வசதியுடன் கட்டப்பட்டு வந்தது. அதேபோல் ஓய்வு அறை, வாகன நிறுத்துமிடம், லிப்ட் வசதி, தீ தடுப்பு கருவிகளுடன் நவீன வசதிகளுடன் கொண்டதாக பார்க்கிங் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் பார்க்கிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தது. இதனையொட்டி அடுத்தவாரம் இந்த பார்க்கிங் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. இதில் கார்களுக்கு ₹50, இருசக்கர வாகனங்களுக்கு ₹10 கட்டணம் வசூலிக்கப்படும். எனவே பொதுமக்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தாமல் பார்க்கிங்கை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தெரிவித்தார்.

Tags : completion ,bus stand ,Vellore ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி