×

புளியங்குடியில் முதல்வர் பிரசாரம்

புளியங்குடி, பிப்.19: புளியங்குடியில் இன்று நடைபெறும் மகளிரணி ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும் முதல்வரை வரவேற்க திரண்டு வருமாறு மனோகரன் எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார்.  இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் இன்று காலை 10மணிக்கு கடையநல்லூரில் பிரசாரம் தொடங்குகிறார். 11 மணிக்கு புளியங்குடி கண்ணா திரையரங்கு வளாகத்தில் மகளிருடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் சங்கரன்கோவிலில் நடைபெறும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் பங்கேற்கிறார். தமிழக முதல்வர் முதன் முதலாக புளியங்குடிக்கு வருகை தந்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அவருக்கு வாசுதேவநல்லூர் தொகுதியில் உள்ள மாநில, மாவட்ட, உள்ளூர் நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று வரவேற்க அழைக்கிறேன்.

Tags : Chief Minister ,campaign ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...