திமுக சார்பில் அம்பை தொகுதியில் போட்டியிட சென்னை தொழிலதிபர் மனு

வி.கே.புரம், பிப்.19: அம்பை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக சென்னையைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் அஜய் படையப்பன் சேதுபதியார் நேற்று சென்னை திமுக தலைமையகத்தில் மனு தாக்கல் செய்தார்.    தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் நேற்று முதல் வேட்புமனு பெறப்பட்டு வருகிறது. அம்பை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக சென்னையைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் அஜய் படையப்பன் சேதுபதியார் நேற்று சென்னை திமுக தலைமையகத்தில் மனு தாக்கல் செய்தார். பொங்கல் பண்டிகையையொட்டி வி.கே.புரம், அம்பை நகராட்சி பகுதிகளில் உள்ள 20ஆயிரம் ஏழை, எளியவர்களுக்கு வேட்டிச் சட்டை, சேலைகளை வழங்கி தொகுதியில் அறிமுகமாகி உள்ளார்.

Related Stories:

More