ரயில்வே ஓய்வூதியர்கள் ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி, பிப். 19: கோவில்பட்டியில்  ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியர்  சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  சங்கத் தலைவர் அருமைராஜ் தலைமை வகித்தார். செயலாளர்  தங்கவேல் வரவேற்றார்.  விருதுநகர் கிளைச் செயலாளர் தாவூத்,  மதுரை கோட்ட ரயில்வே ஓய்வூதியர் சங்க செயலாளர் தீனதயாளன் பேசினர். ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ஹரிஹர சுப்பிரமணியன் தீர்மானங்களை  வாசித்தார். ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை  உடனே வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வாங்கும் அனைவருக்கும் சட்டப்படி  இலவச பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க  பொருளாளர் முருகையா நன்றி கூறினார்.

Related Stories:

>