மதுரை ஏப். 3: மதுரை மாநகர காவல்துறை சார்பில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் 6க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் மதுரை விளக்குத்தூண் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் கம்பர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஈ.வே.ரா நாகம்மை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவற்றை போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேரில் பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
