வைகுண்டத்தில் ஓய்வூதியர் சங்க கூட்டம்

வைகுண்டம், பிப். 19: தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் வெங்கடாச்சாரி தலைமை வகித்தார். செயலாளர் ராஜா தேவமித்ரன் ஆண்டறிக்கை வாசித்தார். வரவு செலவு கணக்கை  பொருளாளர்  துரைராஜ் தாக்கல் செய்தார். துணைச் செயலாளர் மாடசாமி சொர்ணம் வரவேற்றார். கொரோனா காலத்தில் உயிரியிழந்த உறுப்பினர்கள் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய வைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணனுக்கு கூட்டத்தில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டிப் பேசினர்.

Related Stories:

>