×

கொளுத்தும் கோடை தென்னந்தடுக்கு தேவை அதிகரிப்பு

பழநி, ஏப்.3: பழநி மேற்குபகுதி கிராமங்களான ஆண்டிபட்டி, குதிரையாறு, பெருமாள்புதூர், பெரியம்மாபட்டி பகுதிகளில் தென்னந்தடுப்பு தயாரிப்பு முக்கிய குடிசைத் தொழிலாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தென்னந்தடுக்குகள், தமிழகத்தின் வெப்பமான பகுதிகளில் வீட்டின் மேற்கூரை அமைக்கவும், குடிசை அமைக்கவும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மாநிலம் முழுவதும் தென்னந்தடுக்குகளின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென்னந்தடுக்கு தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், கோடை வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவும் தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னந்தடுக்குகள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கோழிப் பண்ணைகளுக்கும் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தென்னந்தடுக்குகளின் விலையும் உயர்ந்து வருகிறது என்றனர்.

 

 

Tags : Palani ,Andipatti ,Kudhyayar ,Perumalputhur ,Periammapatti ,Tamil Nadu ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு