×

உதயமார்த்தாண்டபுரம் சௌந்தரநாயகி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

முத்துப்பேட்டை, ஏப். 3: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் சௌந்தரநாயகி அம்பிகா சமேத அபிமுத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பால்குடம் எடுத்து வரப்பட்டு முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

மாலை சாமிக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு போடுதல் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்று, இரவு நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ சட்டநாதர் சிவாச்சாரியார் மற்றும் ஆலய நிர்வாகிகள் கிராமவாசிகள் உதயமார்த்தாண்டபுரம் மற்றும் சுற்று பகுதி கிராமவாசிகள் பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.

 

Tags : Panguni Uttara festival ,Udayamarthandapuram Soundaranayaki temple ,Muthupettai ,Udayamarthandapuram Soundaranayaki Ambika Sametha Abhimutheeswarar temple ,Tiruvarur district ,Lord Muruga ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு