- திருத்துறைப்பூண்டி நகராட்சி
- திருத்துறைப்பூண்டி
- திருவாரூர் மாவட்டம்
- திருத்துறைப்பூண்டி நகராட்சி
- முத்துப்பேட்டை சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி…
திருத்துறைப்பூண்டி, ஏப். 3: திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட ரூ.129.50 லட்சம் மதிப்பீட்டில் 2.50 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி முத்துப்பேட்டை ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகராட்சி வார்டு 15, 17, 18, 22, 23 பகுதிகளில் உள்ள 2,800 மக்கள் குடிநீர் வசதி பெறும் வகையில் ரூ.129.50 லட்சம் மதிப்பீட்டில் 2.50 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகட்டப்பட்டது. கட்டப்பட்ட புதிய நீர்த்தேக்க தொட்டி மூலம் கடந்த மார்ச் 7ம் தேதி முதல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
