- தஞ்சாவூர்
- அகில இந்திய படப்பிடிப்பு போட்டி
- அகில இந்திய காவல்துறை படப்பிடிப்பு போட்டி
- குருச்சுராம்
- தில்லி
தஞ்சை, ஏப்.3: அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் தஞ்சையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் தங்கம் வென்று சாதனை டெல்லி அருகே குருகிராமில் அகில இந்திய அளவிலான காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி 8 நாட்கள் நடைபெற்றது. இதில் 3 வகை துப்பாக்கி பிரிவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் விஐபி பாதுகாப்பு துப்பாக்கி ரகமான எம்பி-5 துப்பாக்கி சுடுதல் பிரிவில் தஞ்சாவூர் மாவட்டம், துலுக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மத்திய காவல்துறை தலைவர் ஜி.பி. சிங் பாராட்டி வாழ்த்தினார். இந்திய அளவில் தங்க பதக்கம், கோப்பையை 2-வது முறையாக பெற்று சாம்பியன் பட்டத்தை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தக்கவைத்துள்ளார். போட்டியில் தங்கம் வென்று தஞ்சைக்கும், தமிழகத்திற்கும் பெருமை இன்ஸ்பெக்டர் சேர்த்த சிவக்குமாருக்கு, கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
