×

ஆண்டிமடம் பகுதியில் வாக்கு பதிவு மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு: ஆலோசனைகளை வழங்கினார்

ஜெயங்கொண்டம், ஏப். 3: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இலையூர் கிராமத்தில் பாகம் எண் 115 முதல்1 20 வரை, வாரியங்காவல் கிராமத்தில் பாகம் எண் 105 முதல் 108 வரை உள்ள வாக்கு சாவடி மையங்களை பொது தேர்தல் பார்வையாளர் கைலாஷ் வான்கடே ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் சாய்வு தளம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். வட்டாட்சியர் சுசீலா, வருவாய் ஆய்வாளர்கள் குவாகம் வருவாய் ஆய்வாளர் ஜெனிபர், ஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் அரசு, கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

Tags : Andimadam ,Jayankondam ,Ilaiyur ,Andimadam taluk ,Waringaval ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு