×

தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

காரைக்கால், ஏப்.3: புதுச்சேரி சட்ட மன்ற தேர்தல் வருகிற ஏப்.9ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை 4 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை இயக்குநர் சிவக்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புதுச்சேரியில் ஏப்.9ம் தேதி சட்டமன்றதேர்தல் நடைபெறுகிறது. ஆகையால் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகள் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி,காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்.7ம் தேதி முதல் ஏப்.10ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும்,இந்த தேதிகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும். சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணைப்படி எந்தவித மாற்றமும் இன்றி தேர் வுகள் நடைபெறும். ஆகையால் மாணவர்கள் இதைகவனத்தில் கொண்டு திட்டமிட்டப்படி தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள் ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Tags : Puducherry ,Karaikal ,Puducherry Legislative Assembly ,Education Department ,Sivakumar ,Legislative Assembly ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு