ரவுடி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

விக்கிரவாண்டி: கடலுார் ரவுடி வீராங்கன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி கிருஷ்ணன்(32), என்பவரை நேற்று முன்தினம் போலீசார் விசாரணைக்காக பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பத்திற்கு அழைத்து சென்றபோது சப் இன்ஸ்பெக்டர் தீபனை ரவுடி கிருஷ்ணன் கத்தியால் குத்தியதால் தற்காப்பு நடவடிக்கையாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முண்டியம்பாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் போலீஸ் சுட்டு கொன்றதற்கு சிபிஐ விசாரணை நடத்த கோரியும், நிவாரணம் வழங்க கோரியும் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சென்றனர். இதையடுத்து, ரவுடி உடல் மீண்டும் பிணவறையில் வைக்கப்பட்டது.

Related Stories: