திருவில்லிபுத்தூர் அருகே 30 ஆண்டுக்குப் பின் நிரம்பிய கண்மாய்

திருவில்லிபுத்தூர், பிப்.19: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பானாங்குளம் கண்மாய் 30 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் கடந்த மாதம் பரவலான மழை பெய்தது. இதனால் அடிவாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் கண்மாய், குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதையொட்டி திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணை நிரம்பியது. இதை தொடர்ந்து விவசாயிகள் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு திறந்துவிடப்பட்ட தண்ணீர் வத்திராயிருப்பு மற்றும் அதிகபட்சமாக சுந்தரபாண்டியம் வரை உள்ள கண்மாய்கள் நிரம்பும். ஆனால், இம்முறை அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் வரும் வகையில் நீர்வழி ஆக்கிரமிப்பு, முட்புதர்கள் அகற்றப்பட்டன. அந்த வகையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 35 கி.மீ தூரமுள்ள  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பானாங்குளம் கண்மாய்க்கு முதன் முறையாக  தண்ணீர் வந்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>