தரையில் விழுந்த மூதாட்டி பலி

போடி, பிப். 19: போடியில் உள்ள குலசேகரபாண்டியன் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மனைவி கருப்பாயி (65). இவர், கடந்த 16ம் தேதி கடைக்கு சென்றவர், திடீரென தரையில் விழுந்து பின்தலையில் பலத்த அடிபட்டு பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார். அவரது கணவர் கருப்பாயியை மீட்டு, போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கருப்பாயி இறந்தார். கணவர் கொடுத்த புகாரின்பேரில் போடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>