×

விகேபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

விகேபுரம்,ஏப்.3: விகேபுரம் நகராட்சி சார்பாக 100சதவீதம் வாக்கு அளிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இருதயகுளம் அமலி பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி, விகேபுரம் நகராட்சியை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள் 100% வாக்கு அளிப்பதை வலியுறுத்தி கையில் பதாகையுடன் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை பள்ளி தலைமையாசிரியை அருள்மேரி தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் மகாதேவன், பணி மேற்பார்வையாளர் கோமதிநாயகம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுக நைனார், பொறியாளர் முகமது ஆரிப், ஆய்வாளர் இசக்கியப்பன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Whikepuram ,VIKEPURAM, AP.3 ,VIKEPURAM ,Irodayakulam Amali School ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு