×

திருச்செந்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.61,200 பறிமுதல்

திருச்செந்தூர்,ஏப்.3: திருச்செந்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.61 ஆயிரத்து 200ஐ தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். திருச்செந்தூர் அருகே உடன்குடி – செட்டியாபத்து சந்திப்பில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர் மொஹிது அப்துல் காதர் தலைமையில் எஸ்எஸ்ஐ தர்மர், காவலர்கள் அம்சு ராஜா, வெள்ளத்தாய் உள்ளிட்டோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தண்டுபத்து அருகே உள்ள, சிதம்பரபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர் (28) என்பவரது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.61 ஆயிரத்து 200 வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருச்செந்தூர் தனி வட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் ஒப்படைத்தனர்.

Tags : Tiruchendur ,Election Permanent Monitoring Team ,Taluk ,Officer ,Udangudi-Chettiapattu ,Monitoring ,Mohithu… ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு