×

காட்டாற்று வெள்ளத்தால் மூல வைகை ஆற்றில் தடுப்புச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

வருசநாடு, பிப். 19: மூல வைகை ஆறு பகுதியில், சில மாதங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால், கடமலைக்குண்டு அருகே மூல வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், பல இடங்களில் மூல வைகை ஆற்றில் ஓரமாக கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர்கள் சேதமடைந்தன. விளைநிலங்களில் ஆற்று நீர் புகுந்து பயிர்கள் பலத்த சேதம் அடைந்தது. வெள்ளத்தால் சேதமடைந்த தடுப்புச்சுவர்களை கட்டித்தரக்கோரி, விவசாயிகள் ஆண்டிபட்டி, தேனியில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் சேதமடைந்த பகுதியில் ஆய்வு செய்ததோடு சரி, தடுப்புச்சுவர் கட்டவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து மயிலாடும்பாறை கிராம விவசாயி ஈஸ்வரன் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, அய்யனார்கோவில், வருசநாடு, சிங்கராஜபுரம், தர்மராஜபுரம் ஆகிய பகுதிகளில் மூல வைகை ஆற்றின் கரையோரம் தடுப்புச்சுவர்கள் அரசு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பல இடங்களில் வெள்ளத்தடுப்பு சுவர்கள் பலத்த சேதமடைந்து, ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால், விளைநிலங்களில் பயிர்கள் சேதமடைந்தன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : river ,floods ,Vaigai ,
× RELATED அழகர்மலையில் இருந்து வந்த...