×

புனித அருவி அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

பென்னாகரம், ஏப். 3: ஊட்டமலை புனித அருவி அன்னை ஆலயத்தில், பாதம் கழுவும் நிகழ்வு மற்றும் திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாட்கள் தவக்காலத்தின் கடைசி வார வியாழன், புனித வியாழனான கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் இறுதி ராபோஜன நற்கருணை மற்றும் குருத்துவத்தை நிறுவுதல், சீடரின் காலை கழுவிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், நேற்று புனித வியாழன் கடைபிடிக்கப்பட்டது. ஊட்டமலை கிராமத்தில் உள்ள புனித அருவியின் அன்னை ஆலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பங்குத்தந்தை மரிய ஜோசப், பங்கு மக்களின் பாதங்களை கழுவி திருப்பலி மேற்கொண்டார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தினர்.

Tags : Holy Aruvi Mother Church ,Pennagaram ,Ootacamund ,Holy ,Lent ,Christians ,Holy Thursday ,Jesus Christ… ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு