உத்தமபாளையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

உத்தமபாளையம், பிப். 19: உத்தமபாளையத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேனியில் தங்கினார். நேற்று காலை உத்தமபாளையத்திற்கு வரும் வழியில் பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர் என வழிநெடுகிலும் பொதுமக்கள் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்தபோது எழுந்து நின்ற பெண்கள், முதியவர்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர். இதனை மகிழ்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். வரவேற்பில், தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணன் (தெற்கு), தங்கதமிழ்செல்வன் (வடக்கு), உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் பாஸ்கரன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், உத்தமபாளையம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் முல்லை சேகர்,திமுக தேர்தல் பணிக்குழு கம்பம் செல்வேந்திரன், கழக தீர்மானக்குழு இணைச்செயலாளர் ஜெயக்குமார், கம்பம் நகர செயலாளர் (வ) துரைநெப்போலியன், (தெ) சூர்யா செல்வக்குமார், கம்பம் நகர பொறுப்புக்குழு தலைவர் சிங் செல்லப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சொக்கர், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் பாஸ்கரன், ஜெகன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஸ்டீல் ஆனந்த், வழக்கறிஞர் அணி ராஜா சந்திரமோகன், முன்னாள் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஜாய்ராஜா, கம்பம் நகர மாணவரணி அமைப்பாளர் சரவணன். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வீரபாண்டியன், ஒன்றிய பிரதிநிதி ரவி, நகர மாணவரணி துணை அமைப்பாளர் ராஜா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், கம்பம் நகர பொறுப்புக்குழு உறுப்பினர் குரு குமரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பால்பாண்டிராஜா.

தேனி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரும், யூனியன் சேர்மனுமான சக்கரவர்த்தி, தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் எம்எல்ஏ சரவணகுமார், செல்லபாண்டியன், அருணா சேகர், முனியாண்டி, வெங்கடாசலபுரம் சுரேஷ், வக்கீல் ராஜசேகர், மயில்தாய் அன்புச்செழியன், செல்வன், ஜீவா, அய்யப்பன், முகமது பஷீர், ஸ்டாலின் குணா, நாராயண பாண்டியன், முரளி, ராஜவெங்கடேசன், தேனி வைகை ஸ்கேன் டாக்டர்

பாண்டியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், தேனி மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் சின்னமனூர் சன்னாசி, தேனி தெற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சின்னமனூர் மனோகரன், தெற்கு மாவட்ட விவசாய அணி சின்னமனூர் தக்காளி அக்கீம், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரவின்குமார், துணை அமைப்பாளர் பிரவின்குமார், சின்னமனூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜனார்த்தனன், ஊத்துப்பட்டி கிளைச்செயலாளர் வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>