சாலையோர வியாபாரிகளிடம் தினசரி கட்டணம் வசூலிக்கும் உரிமை ரூ.67 லட்சத்துக்கு ஏலம்

காரைக்குடி, பிப்.19: காரைக்குடி நகராட்சிக்கு சொந்தமான இனங்களுக்கான கட்டண வசூல் உரிமை ரூ.67 லட்சத்திற்கு ஏலம் போனது. காரைக்குடி நகராட்சிக்கு சொந்தமான இனங்களுக்கான ஏலம் நகரமைப்பு அலுவலர் மாலதி, மேலாளர் குமார், வருவாய் ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், சக்திபாலன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் அண்ணா தினசரி கடைகளில் கட்டணம் வசூல், பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பஸ்களுக்கு தினசரி கட்டண வசூல், ஆடு அடிக்கும் தொட்டியில் தினசரி கட்டணம் வசூல், பழைய பஸ்ஸ்டாண்டு பூ விற்பனை செய்யும் உரிமை, சாலை ஓரங்களில் தற்காலிக கடை வைத்துள்ளவர்களிடம் கட்டணம் வசூல் செய்தல், முடியரசன் சாலையில் உள்ள நகராட்சி பூங்காவில் கட்டணம் வசூல் மற்றும் கல்லுக்கட்டி மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டணம் வசூல் செய்தல் ஆகிய இனங்களுக்கான ஏலம் நடந்தது.

இதில் ஆடு அடிக்கும் தொட்டியில் கட்டணம் வசூல் செய்ய ரூ.4 லட்சத்து 54 ஆயிரத்துக்கும், சாலை ஓரங்களில் தற்காலிக கடை வைத்துள்ளவர்களிடம் கட்டணம் வசூல் செய்ய ரூ.67 லட்சத்து 300க்கும் ஏலம் போனது.

கடந்த முறை குறைவான தொகைக்கு ஏலம் விடப்பட்ட நிலையில் குறைந்தபட்ச ஏலக் கேள்வி தொகையாக ரூ.39 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இதில் பலத்த போட்டி நிலவி வந்ததால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ரூ.67 லட்சத்து 300 க்கு மிக அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>