×

மாடித்தோட்டம் அமைக்க மானியம்

சிங்கம்புணரி, பிப்.19:  சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்தில்  மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பாக  மானியம் வழங்கப்படுகிறது. இதில் வீட்டுத்தோட்டம், மாடி தோட்டம் என இரண்டு வகையான கிட்டில் பொருட்கள் வழங்கப்படுகிறது. வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான கிட்டில் 6 வகை காய்கறி விதைகள், உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேப்ப எண்ணெய் மருந்து, தென்னை நார் கழிவு, செடிகள் வளர்ப்பதற்கான பைகள், செயல் விளக்க கையேடு உள்ளன. இதை 40 சதவீதம் மானியம் போக ரூ.510க்கும், சொட்டு நீர் அமைப்பதற்கான கிட்  40 சதவீதம் மானியம் போக ரூ.720க்கும் வாங்கிக்கொள்ளலாம். இப்பகுதியில் மாடித்தோட்டம் அமைக்க விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் எஸ்.புதூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் தகவல்களுக்கு 99653 23089, 73736 87981 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags : terrace ,
× RELATED பெங்களூரு அருகே பேடர்ஹள்ளி பகுதியில்...