கடலாடி அருகே மினி கிளினிக் திறப்பு

சாயல்குடி, பிப்.19: கடலாடி அருகே பொதிகுளம், மாரந்தை கிராமத்தில் மினி கிளினிக்குகள் நேற்று திறக்கப்பட்டன.  விழாவிற்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் தலைமை வகித்தார். பரமக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் இந்திரா முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவர் அலுவலர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, ஆப்பனூர் கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி பாண்டியன்,  வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக்கண்ணன், பாண்டி, பொதிகுளம் பஞ்சாயத்து தலைவர் லெட்சுமி திருவாப்பு, மாரந்தை பஞ்சாயத்து தலைவர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>