×

கேரளாவில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்

குமரி: கேரளா மாநிலத்தில் வருகின்ற 09.04.2026 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, தமிழக கேரள எல்லையான பத்மனாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதி மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபானக்கூடங்கள் 07.04.2026 அன்று காலை 10.00 மணி முதல் 09.04.2026 (கேரள மாநிலம் தேர்தல் நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரையிலும் செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பா.ஜ.க. 98 தொகுதிகளிலும், காங்கிரஸ் 92 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 76 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளை களமிறக்கி உள்ளன.

Tags : TASMAC ,Kanyakumari district ,Kerala ,Kumari ,Padmanabhapuram ,Tamil Nadu-Kerala ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்...