பரமக்குடி நகராட்சியில் ஆழ்குழாய் கிணறுகள் திறப்பு

பரமக்குடி, பிப்.19:  பரமக்குடி நகர் பகுதியில் எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்டுள்ள 3 ஆழ்குழாய் கிணறுடன் கூடிய தொட்டி திறக்கப்பட்டது. பரமக்குடி நகராட்சிக்கு 20 வார்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 15 வார்டுகளில் கட்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுடன்  கூடிய தொட்டிகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று ஜீவாநகர், பெருமாள் கோவில் தெரு, நயினார்கோவில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள 3  ஆழ்துளை கிணறுடன் கூடிய தொட்டியினை எம்எல்ஏ சதன் பிரபாகர் திறந்து வைத்தார். நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், நகர்  பேரவை துணைச் செயலாளர் கார்த்திக், பரமக்குடி மாணவரணி செயலாளர் முத்துக்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சந்திரசேகர், பரமக்குடி ஒன்றிய நிர்வாகிகள் ஓவியர் சரவணன், இந்திரன்   உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>