மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கல்

பரமக்குடி, பிப்.19: போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச  உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசின் அலீம்கோ நிறுவனம் மற்றும் இந்தியா இன்ஜினியரிங் லிமிடெட் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக, போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகோபாலன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்தியா குணசேகரன், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச  உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி பாதாள பைரவன், ஊராட்சி ஒன்றிய மேலாளர் பாஸ்கரன்  உட்பட ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>